/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேவூர் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
தேவூர் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 25, 2025 01:39 AM
சங்ககிரி, அரசிராமணி பேரூராட்சி, குறுக்குப்பாறையூரில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சங்ககிரி ஒன்றியம், கோணக்கழுத்தானுார் கிராம விவசாயிகள் நேற்று நெடுஞ்சாலையோரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்ககிரி தாலுகா, அரசிராமணி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை கொட்டுவதற்கு, குறுக்குபாறையூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குறுக்குப்பாறையூர் விவசாயிகள், திடக்கழிவு திட்டத்தை இடமாற்றம் செய்தும், அக்கட்டடத்தில் கால்நடை மருத்துவமனை கேட்டு கடந்த, 162 நாட்களாக தினமும் திடக்கழிவு கட்டடத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்து, பின்னர் கலைந்து சென்று விடுவர்.
இந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று தேவூர் அருகே கோணகழத்தானுாரில் இடைப்பாடி - குமாரபாளையம் செல்லும் சாலை ஓரமாக, அப்பகுதி விவசாயி செம்பாகவுண்டர் தலைமையில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் பெருமாள், மாவட்ட செயலர் ராமமூர்த்தி, சங்ககிரி வட்டார தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாரல் மழையில் நனைந்தவாறு, கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்,

