/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 17, 2024 07:24 AM
சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் மின் கோட்ட அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை (18) காலை, 11:00 மணிக்கு நடைபெற உள்ளது. மேட்டூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை வகிக்க உள்ளார். இதில் ஓமலுார் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என,
செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.* சேலம் அன்னதானபட்டியில் உள்ள மேற்கு மின் கோட்ட அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை (18) பிற்பகல்,
3:00 மணிக்கு நடைபெற உள்ளது. மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு தலைமை வகிக்க உள்ளார். இதில், மேற்கு
கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை,
செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.