/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்சாரத்தை துண்டித்து காப்பர் கம்பிகள் திருட்டு
/
மின்சாரத்தை துண்டித்து காப்பர் கம்பிகள் திருட்டு
ADDED : ஜூன் 19, 2025 01:36 AM
காரிப்பட்டி, காரிப்பட்டி, கூட்டாத்துப்பட்டியில் கடந்த, 16ல் காலை மின்தடை ஏற்பட்டது. இதனால் ஒயர்மேன் ஜனகராஜ், பாலப்பட்டி ஏரிக்கரையில் உள்ள மின்மாற்றியை சோதனை செய்தார்.
அப்போது அதில் இருந்த, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான, காப்பர் கம்பி, ஆயில் திருடுபோனது தெரிந்தது. இதுதொடர்பாக, கூட்டாத்துப்பட்டியில் பணிபுரியும் மின்வாரிய உதவி பொறியாளர் மதன்குமார், 45, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'மின்துறை பணியில் அனுபவம் உள்ளவர்கள்தான், மின்சாரத்தை துண்டித்து, இதுபோன்ற திருட்டில் ஈடுபட முடியும். இதுகுறித்து விசாரணை நடக்கிறது' என்றனர்.