UPDATED : நவ 20, 2026 02:13 AM
ADDED : நவ 20, 2026 01:07 AM

மேட்டூர்: கொளத்துார் அடுத்த குரும்பனுார் வடக்கு பிரிவு, தார்க்காடை சேர்ந்த விவசாயி சண் முகம், 65. இவருக்கு, சிவிலிகரடு ஏரி அருகே, 6 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், 3 ஏக்கரில் ஆலை கரும்பு சாகுபடி செய்துள்ளார்.
கடந்த, 15 இரவு, அங்கு புகுந்த ஒற்றை யானை, கரும்பு பயிர்களை தின்றதோடு, சேதப்படுத்திச்சென்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, அதே நிலத்தில் புகுந்த யானை, கரும்புகள், பாசனத்துக்கு பதிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்களை உடைத்து சேதப்படுத்தின. அதேபோல் அருகே உள்ள விவசாயி குஞ்சப்பன், 65, என்பவரது நிலத்தில் சாகுபடி செய்திருந்த சில தென்னை மரங்களையும் யானை சேதப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய நிலத்துக்குள் யானை நுழையாமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
