/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும்'
/
தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும்'
ADDED : மே 17, 2025 01:40 AM
சேலம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். குழு தலைவரான, சேலம் எம்.பி., செல்வகணபதி தலைமை வகித்து பேசியதாவது:
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊரக குடிநீர் இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், துாய்மை பாரத இயக்கம் உள்பட பல்வேறு துறைகள் சார்ந்த, 37 திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தாமதமின்றி பணிகளை மேற்கொண்டு அதன் முழு பயன் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும். அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் முறையாக செயல்படுத்தும் அதிகாரம், அரசு அலுவலர்களுக்கே உள்ளது. பயனாளிகளை தேர்வு செய்யும்போது கவனமுடன் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். தேவைப்படும் பணிகளை, அரசின் திட்டங்கள் வாயிலாக விரைந்து செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன், எம்.பி.,க்கள் மணி, மலையரசன், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., சதாசிவம், டி.ஆர்.ஓ., ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.