தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்க வலியுறுத்தல்

சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்க வலியுறுத்தல்

சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்க வலியுறுத்தல்


UPDATED : அக் 05, 2026 01:52 AM

ADDED : அக் 05, 2026 01:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 01:52 AM ADDED : அக் 05, 2026 01:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: தமிழகத்தில், சிறுதானியங்கள் அதிகப்படியாக சாகுபடி செய்யும் மாவட்டத்தில் சேலமும் ஒன்று. நடப்பு, 2026 - 27ல் சிறுதானிய பரப்பு,

உற்பத்தித்திறன் ஆகியவற்றை அதிகரிக்க, வேளாண் துறை, பல்வேறு மானிய திட்டங்களை செயல்படுத்த உள்ளது.மாற்றுப்பயிர் திட்டம், சான்று விதை உற்பத்திக்கு மானியம் வழங்குதல், கேழ்வரகு சாகுபடி விவசாயிக்கு பின்னேற்பு மானியம் வழங்குதல், கேழ்வரகு மற்றும் சிறுதானிய உழவர் குழுக்கள் உருவாக்குதல், சிறு தழைகள் வழங்குதல் போன்ற திட்-டங்கள் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும்.

மாற்றுப்பயிர் திட்டத்தில் ஏக்கருக்கு, 1,250 ரூபாய் மானியம், சான்று விதை உற்பத்திக்கு கிலோவுக்கு, 30 ரூபாய் மானியம், கேழ்வரகு சாகுபடிக்கு பின்னேற்பு மானியம், ஏக்கருக்கு, 1,600 ரூபாய் மற்றும் 350 ரூபாய் மதிப்பில் கேழ்வரகு சிறு தழைகள், 100 சதவீத மானியத்தில் பெறலாம்.

அதனால் சேலம் மாவட்ட விவசாயிகள், சிறுதானிய இயக்கம் மூலம் பயன்பெற, சிறுதானிய சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்-தியை அதிகரிக்க செய்ய வேண்டும். திட்டங்கள் குறித்து விரி-வான விபரங்கள் அறிய, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் விரி-வாக்க மையத்தை அணுகலாம் என, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன்

தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us