ADDED : அக் 05, 2026 01:06 AM
சேலம்: தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம்(சி.ஐ.டி.யு.,) சார்பில் வெள்ளி விழா மாநாடு, சேலத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் வெங்கடபதி தலைமை வகித்தார். அகில இந்-திய துணைத்தலைவர் பத்மநாபன் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, மற்றொரு துணைத்தலைவர் சவுந்தரராஜன் கூறியதா-வது:
சுமை தொழிலாளர்களின் வேலை நிலைமை, பணி பாதுகாப்பு, வேலை உறுதிப்படுத்தும்படி தனிச்சட்டம் இயற்ற வேண்டும். ஆலை தொழிலாளர்களுக்கு வழங்குவது போல, சுமைப்பணி தொழிலாளர்களுக்கும் உணவகம், கழிப்பறை, ஓய்வறை உள்-ளிட்ட அடிப்படை வசதிகள் தேவை. சுமைப்பணி தன்மை, எதிர்கொள்ளும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கும் விபத்து, உயிரிழப்பு மற்றும் குடும்ப சுப நிகழ்ச்சிகளுக்கு உரிய நிதியுதவி அளிக்கும்படி, வாரிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
