/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வி.ஏ.ஓ.,வை இடமாற்ற பா.ம.க., வலியுறுத்தல்
/
வி.ஏ.ஓ.,வை இடமாற்ற பா.ம.க., வலியுறுத்தல்
ADDED : பிப் 02, 2024 09:55 AM
வாழப்பாடி: பா.ம.க.,வின், வாழப்பாடி கிழக்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் துக்கியாம்பாளையம் ஊராட்சி மேலுாரில் நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் பச்சமுத்து தலைமை வகித்தார்.
அதில் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட செயலர் முருகன், வைத்தியகவுண்டன்புதுாரில் நாளை நடக்க உள்ள ஓட்டுச்சாவடி முகவர் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க, கட்சி நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில் துக்கியாம்பாளையம் பஸ் ஸ்டாப், புளியந்தோப்பு அருகே, அத்தனுார்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வேகத்தடைகள் அமைத்தல்; நீர்முள்ளிக்குட்டை ஊராட்சி ராஜாப்பட்டணத்தில், 90 லட்சம் ரூபாய் மதிப்பில், இரு அடுக்கு சமுதாயக்கூடம் அமைக்கும் திட்டப்பணிக்கு செயல் வடிவம் கொடுத்து கட்டுமானப்
பணியை விரைந்து முடித்தல்; துக்கியாம்பாளையத்தில் குறித்த நேரத்துக்கு பணிக்கு வராமல் மெத்தன போக்குடன் நடந்து கொள்ளும் வி.ஏ.ஓ.,வை, இடமாற்றம் செய்ய, கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய தலைவர் சக்திவேல், மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கர், பன்னீர்செல்வம், பாலாஜி, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

