/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பூங்காவை பூட்டிய ஊழியர்: உள்ளே தவித்த மக்கள்
/
பூங்காவை பூட்டிய ஊழியர்: உள்ளே தவித்த மக்கள்
ADDED : ஆக 21, 2025 02:16 AM
சேலம், சேலம், அம்மாபேட்டையில், மாநகராட்சி சொந்தமான குமரகிரி ஏரியை சுற்றி, பூங்கா அமைக்கப்பட்டு, கரைப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ள பாதை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு, 7:00 மணிக்கு திடீரென பூங்கா கதவை பூட்டிவிட்டு, ஊழியர் சென்றுவிட்டார். இதனால் உள்ளே நடைபயிற்சியில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். அந்த வழியே சென்றவர்களிடம் பெண்கள் முறையிட்டதும், அவர்கள் உடனே மொபைல் போனில் தொடர்பு கொண்டும்,
பூங்கா கதவை திறக்க ஊழியர் மறுத்துவிட்டார். இதை அறிந்து அம்மா பேட்டை போலீசார் விரைந்தனர். பூங்காவுக்குள் சிக்கியவர்களிடம் விசாரணை நடந்தது. இதையடுத்து போலீசார் தொடர்பு கொண்டும், அந்த ஊழியர், வாக்குவாதம் செய்துள்ளார். பின் எச்சரித்த பிறகே, அங்கு வந்த ஊழியர், பூங்கா கதவை திறந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அடைபட்ட மக்கள், வெளியே வந்து நிம்மதி பெருமூச்சுவிட்டனர். பின் பூங்கா ஊழியரிடம் வாக்குவாதம் செய்த மக்களை, போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர்.