/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்
/
விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்
விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்
விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்
ADDED : பிப் 21, 2025 07:37 AM
சேலம்; சேலம், சீரகாபாடி விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின், வேலைவாய்ப்பு அமைப்பு மூலம், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம், அதற்கான வளாக தேர்வு, கல்லுாரி வளாகத்தில், பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி நடந்தது. துறை டீன் பேராசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
தேசிய அளவில் சுகாதார துறையை சேர்ந்த பல்வேறு நிறுவனத்தினர், மாணவர்களுக்கு வளாகத்தேர்வை நடத்தினர். இதில் சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்பக்கல்லுாரி வளாகம் ஆகியவற்றில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் மாணவர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு கட்டங்களாக நடந்த தேர்வில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத வேலைவாய்ப்பை பெற்றனர். இதனால் அனைத்து மாணவர்களையும், டீன் பாராட்டினார். இதற்கான ஏற்பாட்டை, வேலைவாய்ப்பு அமைப்பின் அலுவலர் தமிழ் சுடர், ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.