/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் ஒத்திவைப்பு
/
காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் ஒத்திவைப்பு
காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் ஒத்திவைப்பு
காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் ஒத்திவைப்பு
ADDED : பிப் 26, 2026 05:20 AM
சேலம்: சேலம்
மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், காலி மதுபாட்டில்களை திரும்ப
பெறும் திட்டத்தை செயல்படுத்த, டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை
எடுத்தது.
அதற்கு நேற்று முன்தினம் முதல், பதிவேடுகள், மது பாட்டிலில்
ஒட்டுவதற்கான வில்லைகள், கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.
ஆனால் அப்பணியில் கடை பணியாளர்களை ஈடுபடுத்தக்கூடாது; தனியே
ஊழியர்களை நியமிக்க வேண்டும் என, அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்கள்
சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அத்திட்டம்
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரிகள்
கூறுகையில், 'மறு அறிவிப்பு வரும் வரை, காலி மதுபாட்டில்களை திரும்ப
பெறும் திட்டத்தை ஒத்திவைக்க, உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர்'
என்றனர்.