தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/நாலெட்ஜ் கல்லுாரி மாணவர்களுக்கு பொறியியல் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

நாலெட்ஜ் கல்லுாரி மாணவர்களுக்கு பொறியியல் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

நாலெட்ஜ் கல்லுாரி மாணவர்களுக்கு பொறியியல் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி


ADDED : அக் 29, 2026 03:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2026 03:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி யில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான பொறியியல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினரான, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர் அஸ்வின் பேசியதாவது:

மாணவர்கள், தனித்திறன்களை கண்டறிந்து, அதற்கேற்ப தொழில் இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், தானியங்கி தொழில்நுட்பம் உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் திறன்களை மேம்படுத்திக்கொண்டு, புது சிந்தனை, ஆராய்ச்சி மனப்பான்மை, சிக்கல்களை தீர்க்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கல்லுாரி முதல்வர் விசாகவேல் பேசுகையில், ''பொறியியல் கல்வி என்பது பட்டம் பெறுவதற்கான படிப்பு மட்டுமல்ல; புது கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சமூக வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குவது. முதல் ஆண்டில் இருந்தே மாணவர்கள் தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, கல்வியுடன் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, தலைமைத்

துவப்பண்பு, ஒழுக்க நெறிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.

நாலெட்ஜ் கல்லுாரி நிறுவனர் சீனிவாசன், அறக்கட்டளை செயலர் குமார், பொருளாளர் சுரேஷ் குமார், கல்லுாரியின் அனைத்து இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us