ADDED : அக் 29, 2026 03:56 AM
சேலம்: சேலம், பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடை சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 58. இவரது வெள்ளி பட்டறை காவலாளி வெங்கடேசனை தாக்கி, 550 கிலோ வெள்ளி பொருட்கள், கடந்த, 12ல் கொள்ளையடிக்கப்பட்டன.
பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்தனர். தனிப்படை போலீசார் விசாரித்து, கோவையை சேர்ந்த முக்கிய குற்றவாளி அபி ேஷக், 21, உள்பட, 5 பேரை, கடந்த, 23ல் கைது செய்து, 323 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர். இரு கார்களை பறிமுதல் செய்து, மேலும் சிலரை தேடினர்.
இந்நிலையில் குற்றவாளிகளுக்கு உதவியாக, பட்டறையில் வெள்ளி ஆபரணங்கள் இருப்பு குறித்த தகவல்களை பரிமாற்றம் செய்ததாக, தஞ்சாவூரை சேர்ந்த நீலவேணி, 35, சேலம், தாதகாப்பட்டி ராஜாராம், 55, அம்மாபேட்டை மனோஜ், 36, பெரமனுார் தங்கராஜ், 57, மெய்யனுார் மகேந்திரன், 52, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். மேலும் சிலரை தேடுகின்றனர்.
