/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சர்ச்'களில் ஆங்கில புத்தாண்டு ஆராதனை விழா
/
'சர்ச்'களில் ஆங்கில புத்தாண்டு ஆராதனை விழா
ADDED : ஜன 01, 2025 01:33 AM
'சர்ச்'களில் ஆங்கில புத்தாண்டு ஆராதனை விழா
சேலம், ஜன. 1-
ஆங்கில புத்தாண்டு-2025 பிறப்பையொட்டி, சேலம் 4 ரோடு குழந்தையேசு பேராலயத்தில், நேற்று இரவு, 10:45 மணிக்கு பங்குதந்தை ஜோசப்லாசர் தலைமையில், நற்கருணை ஆராதனை, ஒருமணி நேரம் நடந்தது. 11.50 மணிக்கு புத்தாண்டு திருப்பலி சிறப்பு ஆராதனை செய்தனர். இதில் குடும்பம் சகிதமாக கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே, சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில், பங்குதந்தை ஜவஹர்வில்சன் ஆசீர்டேவிட் தலைமையில், இரவு 11:30 மணிக்கு கடந்த புத்தாண்டு ஆராதனை, அதற்கு நன்றி தெரிவிக்கும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு புத்தாண்டு ஆராதனை மற்றும் நன்றி படைப்பு காணிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில், கிறிஸ்தவர்கள் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்தி, ஏசுவை வழிபட்டனர். 12:30 மணிக்கு பலி பீடத்தில் இருந்து எடுத்து வேதவசனம் பொருந்திய வாக்குதத்த அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இரவு, 1:00 மணிக்கு நற்கருணை ஆராதனை செய்தபின், அனைவருக்கும் தேநீர், கேக் வழங்கப்பட்டன. இதேபோல, சி.எஸ்.ஐ., லெக்லர் நினைவு ஆலயம், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ., இமானுவேல் ஆலயம், ஜங்ஷன் சி.எஸ்.ஐ., திருத்துவ ஆலயத்தில் சிறப்பு ஆராதனை நடந்தது. மாவட்டத்தில் இரும்பாலை, வாழப்பாடி, முத்தம்பட்டி, சுக்கம்பட்டி, ஆத்துார், சங்ககிரி, இடைப்பாடி, மேட்டூர் சி.எஸ்.ஐ., ஆலயங்களிலும் கிறிஸ்தவர்கள் புத்தாண்டு ஆராதனையில் ஈடுபட்டனர்.

