/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு
/
விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு
விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு
விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு
ADDED : செப் 03, 2025 02:35 AM
சேலம், சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில், தொழில் முனைவோர் மற்றும் புதுமை படைத்தல் அமைப்புகள் மூலம், இறுதியாண்டு மாணவர்களுக்கு, தொழில் முனைவோர் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி, 'ராஷ்ட்ரிய கிராம ஸ்வராஜ் அபியான்' திட்டத்தில், சரஸ்வதி அம்மாள் கல்வி, சமூக நலன் மற்றும் தொண்டு அறக்கட்டளை, மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அலுவலகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.
கல்லுாரி டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து, கிராமப்புற மேம்பாடு, நிலையான பொருளாதார வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து பேசினார். சரஸ்வதி அம்மாள் கல்வி சமூக நலன் மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் சரவணன், தொழில் முனைவோர் முபாரக் அலி, பேச்சாளர் மணி, நிதி விழிப்புணர்வு நிபுணர் செந்தில்முருகன் ஆகியோர், தொழில் முனைவோர் பயணம் மற்றும் நிறுவனத்தை நிர்வகிப்பதற்கான நடைமுறை உத்திகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
முடிவில் மாணவர்களுக்கு இந்திய அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சக சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாட்டை, கல்லுாரியின் தொழில் முனைவோர் அமைப்பு தலைவர் தமிழ்சுடர், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், புதுமை படைத்தல் அமைப்பின் தலைவர் சதீஷ்குமார் செய்திருந்தனர்.