/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலக்கரி சாம்பல் துகளால் சுற்றுவட்டார மக்கள் பாதிப்பு
/
நிலக்கரி சாம்பல் துகளால் சுற்றுவட்டார மக்கள் பாதிப்பு
நிலக்கரி சாம்பல் துகளால் சுற்றுவட்டார மக்கள் பாதிப்பு
நிலக்கரி சாம்பல் துகளால் சுற்றுவட்டார மக்கள் பாதிப்பு
ADDED : மார் 07, 2024 02:24 AM
மேட்டூர், அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பல் துகள்கள், சுற்றுவட்டார கிராமங்களில் பரவுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேட்டூரில், 1987ல், 840 மெகாவாட், 2012ல், 600 மெகாவாட் என, 1,440 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அனல்மின் நிலையங்கள் உள்ளன. இதில் பழைய அனல்மின் நிலையத்தில் ஒரு அலகில், 210 வீதம், 4 அலகுகளில், 840 மெகாவாட், புது அனல்மின் நிலையத்தில் ஒரே அலகில், 600 மெகாவாட் மின்
உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த, 4ல் பாய்லர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் புது அனல்மின் நிலையத்தில், 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணி நடக்கிறது. இன்று பணி முடிந்து மின் உற்பத்தி தொடங்க வாய்ப்புள்ளது.
தற்போது பழைய அனல்மின் நிலையத்தில், 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. அதில், 14,000 டன், புது அனல்மின் நிலையத்தில், 10,080 டன் என, தினமும் மின் உற்பத்திக்கு, 24,080 டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. சமீபகாலமாக பாய்லர்களில் இருந்து வெளியேறும் நிலக்கரி சாம்பல் துகள்கள், அனல்மின் நிலைய வளாகத்திலும், சுாற்று பலமாக வீசும்போது சுற்றுப்பகுதி கிராமங்களிலும் பனி போன்று படர்கிறது. சாம்பல் துகள்களால் அனல்மின்நிலைய சுற்றுப்பகுதியில் உள்ள சின்னகாவூர், திருதங்கல்காட்டு வளவு, புதுக்காவூர், கருப்புரெட்டியூர், ஏரிக்காடு, ரெட்டியூர், சேலம்கேம்ப் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஜலதோஷம், ஆஸ்துமா, தும்மல், ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தினர்.

