/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாராட்டு விழாவில் பங்கேற்க இ.பி.எஸ்.,க்கு அழைப்பு
/
பாராட்டு விழாவில் பங்கேற்க இ.பி.எஸ்.,க்கு அழைப்பு
ADDED : நவ 16, 2024 01:29 AM
பாராட்டு விழாவில் பங்கேற்க
இ.பி.எஸ்.,க்கு அழைப்பு
சேலம், நவ. 16-
மேட்டூர் அணை உபரிநீரால், சேலம் மாவட்டத்தில், 100 ஏரிகள் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை கொடுத்த, முன்னாள் முதல்வரான, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,க்கு பாராட்டு விழா நடத்த, காவிரி உபரி நீர் நடவடிக்கை குழுவினர் முடிவு
செய்தனர்.
அதன்படி மேச்சேரியில் நாளை விழா நடக்க உள்ளது. அதில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்கு, சேலத்தில் உள்ள, இ.பி.எஸ். வீட்டுக்கு, விவசாயிகள் சங்கத்தினர் நேற்று வந்தனர். அதில் குழுவின் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் தம்பையா தலைமையில் பலர், இ.பி.எஸ்.,க்கு அழைப்பிதழ் வழங்கி விழாவில் பங்கேற்க கேட்டுக்
கொண்டனர்.

