/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புதிய உறுப்பினர் சேர்க்கையை இ.பி.எஸ்., துவக்கி வைப்பு
/
புதிய உறுப்பினர் சேர்க்கையை இ.பி.எஸ்., துவக்கி வைப்பு
புதிய உறுப்பினர் சேர்க்கையை இ.பி.எஸ்., துவக்கி வைப்பு
புதிய உறுப்பினர் சேர்க்கையை இ.பி.எஸ்., துவக்கி வைப்பு
ADDED : ஆக 12, 2025 05:21 AM
சேலம்: சேலத்தில், அ.தி.மு.க., புதிய உறுப்பினர் சேர்க்கையை பொதுச்-செயலர் இ.பி.எஸ்., துவக்கி வைத்தார்.
அ.தி.மு.க., சார்பு அணியான இளைஞர், இளம் பெண்கள் பாச-றைக்கு தமிழகம் முழுவதும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி கடந்த, ஆறு மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், சேலம் புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட கெங்கவல்லி, ஆத்துார், ஏற்காடு, வீரபாண்டி, ஓமலுார், இடைப்பாடி, மேட்டூர், சங்ககிரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் இளைஞர், இளம் பெண்கள் பாசறைக்கு, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், புதியதாக சேர்க்-கப்பட்டனர்.
இவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியின்-போது முதல் கட்டமாக, 100 பேருக்கு உறுப்பினர் அட்டையை இ.பி.எஸ்., வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, தமி-ழகம் முழுவதும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாநில செயலர் பரமசிவம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைப்பு செயலர் செம்மலை, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்கள் ராஜமுத்து, ஜெய்சங்கரன் மற்றும் ஒன்றிய நகர, பேரூர்
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

