ADDED : நவ 23, 2026 01:23 AM
அ நிறம் | அளவு
சேலம்: அ.தி.மு.க.,வின், திருச்சி, லால்குடி தொகுதி, எம்.எல்.ஏ., லீமாரோஸ் நேற்று சேலம் வந்தார்.
தொடர்ந்து நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், அக்கட்சி பொதுச்செயலர், இ.பி.எஸ்.,சை சந்தித்து வாழ்த்து பெற்றார்.தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ''கடந்த, 7ல் என் பிறந்தநாள். அப்போது வெளிநாடு சென்றுவிட்டேன். தொடர்ந்து, பொதுச்செயலர், இ.பி.எஸ்.,சை சந்திக்க அனுமதி கேட்டிருந்தேன். தற்போது கிடைத்ததால், அவரை சந்தித்து, ஆசீர்வாதம் பெற்றேன். இளைஞர்கள் எழுச்சியுடன் வந்துள்ளனர். அவர்களுக்கு
என் நன்றி, வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்,'' என்றார்.
