/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மக்களுக்காக நெருப்பாற்றில் நீந்தும் இ.பி.எஸ்.,: அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் பேச்சு
/
மக்களுக்காக நெருப்பாற்றில் நீந்தும் இ.பி.எஸ்.,: அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் பேச்சு
மக்களுக்காக நெருப்பாற்றில் நீந்தும் இ.பி.எஸ்.,: அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் பேச்சு
மக்களுக்காக நெருப்பாற்றில் நீந்தும் இ.பி.எஸ்.,: அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் பேச்சு
ADDED : அக் 21, 2024 07:11 AM
ஆத்துார்: ''தமிழக மக்களுக்காக, இ.பி.எஸ்., நெருப்பாற்றில் நீந்திக்கொண்டிருக்கிறார்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி பேசினார்.
அ.தி.மு.க.,வின், 53ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், ஆத்துார், ராணிப்பேட்டையில் நேற்று நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். அதில், துணை பொதுச் செயலர் முனுசாமி பேசியதாவது:
கடந்த, 42 மாத ஆட்சியில், தி.மு.க., எந்த புது திட்டங்களும் செயல்படுத்தவில்லை. ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கட்சியில் உள்ள மூன்றாவது நபருக்கு தான் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் சொத்துகளை பறித்துவிடக்கூடாது என, கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலினை, துணை முதல்வராக கொண்டு வந்தார். அவரது வழியில் ஸ்டாலினும், மகன் உதயநிதியை துணை முதல்வராக அறிவித்துள்ளார். 2021ல் மீண்டும் அ.தி.மு.க., வெற்றி பெற்று, இ.பி.எஸ்., முதல்வராக வந்திருந்தால், தி.மு.க., காணாமல் போயிருக்கும்.ஸ்டாலின் மகன் என்பதை தவிர உதயநிதிக்கு எந்த தகுதியும் இல்லாத நிலையில், உயர் அதிகாரிகளிடம் கேள்வி கேட்டு வருகிறார். தி.மு.க., ஆட்சி தொடர வேண்டாம் என மக்கள் நினைக்கின்றனர். ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு ஆட்சி செய்கிறார்.
'டிவி'யில் விவாதம் செய்யும் நபர்கள் காசு வாங்கிக்கொண்டு பேசுகின்றனர். இ.பி.எஸ்., மக்களை சந்தித்து போராடி வருகிறார். இங்கிருந்து சென்றவர்கள், சுயநலத்துக்கு பேசுகின்றனர். ஊடகம், பத்திரிகைகள், அ.தி.மு.க.,வை அழிக்க வேண்டும் என, கையூட்டு பெற்றுக்கொண்டு கருத்துகள் கூறுகின்றன. தமிழக மக்களுக்காக, இ.பி.எஸ்., நெருப்பாற்றில் நீந்திக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.இதில் எம்.பி., சந்திரசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, ஏற்காடு சித்ரா, ஓமலுார் மணி, வீரபாண்டி ராஜமுத்து, சங்ககிரி சுந்தரராஜன், மாவட்ட, நகர, ஒன்றிய செயலர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

