/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எதிரிகளை வைத்திருக்கும் இ.பி.எஸ்., டிபாசிட் இழப்பார்: மாஜி எம்.பி., சுகவனம்
/
எதிரிகளை வைத்திருக்கும் இ.பி.எஸ்., டிபாசிட் இழப்பார்: மாஜி எம்.பி., சுகவனம்
எதிரிகளை வைத்திருக்கும் இ.பி.எஸ்., டிபாசிட் இழப்பார்: மாஜி எம்.பி., சுகவனம்
எதிரிகளை வைத்திருக்கும் இ.பி.எஸ்., டிபாசிட் இழப்பார்: மாஜி எம்.பி., சுகவனம்
ADDED : நவ 12, 2024 07:06 AM
காடையாம்பட்டி: ''கூடவே எதிரிகளை வைத்திருக்கும், இ.பி.எஸ்., டிபாசிட் இழப்பார்,'' என, தி.மு.க., பாக முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் எம்.பி.,சுகவனம் பேசினார்.
தி.மு.க., சேலம் மத்திய மாவட்டத்துக்குட்பட்ட, ஓமலுார் சட்ட-சபை தொகுதி, காடையாம்பட்டியில் ஓட்டுச்சாவடி நிலைய முக-வர்கள் ஆலோசனை கூட்டம், ஒன்றிய செயலர் அறிவழகன் தலைமையில் நேற்று நடந்தது. ஓமலுார் தொகுதி பொறுப்பா-ளரும், முன்னாள் எம்.பி.,யுமான சுகவனம் பேசியதா-வது:முதல்வர் ஸ்டாலின், 200 தொகுதிகளை நிர்ணயம் செய்ததை விட, அதற்கு மேலாக கைப்பற்ற வேண்டும். தி.மு.க., வலுவாக உள்ளதால், அனைவரும் நம்மை எதிரிகளாக பார்க்கின்றனர். அதை பற்றி கவலை வேண்டாம். தி.மு.க., குடும்ப கட்சிதான், அப்பா ஒரு கட்சியிலும், மகன் வேறு கட்சியிலும் இருக்க முடி-யுமா. சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதிக-ளையும் தி.மு.க., கைப்பற்றும்.இ.பி.எஸ்., தன்னை சுற்றி பல எதிரிகளை வைத்துள்ளார். அண்ணன் எப்ப போவார், திண்ணை எப்ப காலியாகும் என. அதனால், அ.தி.மு.க.,வை பற்றி கவலை வேண்டாம். பா.ஜ.,வுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று பேசிய இ.பி.எஸ்., தற்போது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என பேட்டியில் தெரிவிக்கிறார். இம்முறை இ.பி.எஸ்.,யை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும். பாக முகவர்கள் தீவிரமாக களப்பணியாற்றிட வேண்டும். இவ்வாறு பேசினார்.மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் குபேந்திரன், காடையாம்பட்டி பேரூர் செயலர் பிரபாகரன் உள்-ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

