/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பன்னீருக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் இ.பி.எஸ்.,: நங்கவள்ளி பிரசாரத்தில் தி.மு.க., வேட்பாளர் பேச்சு
/
பன்னீருக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் இ.பி.எஸ்.,: நங்கவள்ளி பிரசாரத்தில் தி.மு.க., வேட்பாளர் பேச்சு
பன்னீருக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் இ.பி.எஸ்.,: நங்கவள்ளி பிரசாரத்தில் தி.மு.க., வேட்பாளர் பேச்சு
பன்னீருக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் இ.பி.எஸ்.,: நங்கவள்ளி பிரசாரத்தில் தி.மு.க., வேட்பாளர் பேச்சு
ADDED : மார் 28, 2024 07:15 AM

நங்கவள்ளி : 'இண்டியா' கூட்டணியில், தி.மு.க., சார்பில், சேலம் லோக்சபா தொகுதி வேட்பாளரான, செல்வகணபதி, நங்கவள்ளி ஒன்றியத்தில் மல்லப்பனுார் பிரிவு சாலை, விருதாசம்பட்டி, குட்டப்பட்டி, மாதநாயக்கன்பட்டி, பெரிய சோரகை ஊராட்சியில் மாட்டுக்காரன்வளவு, பூமிரெட்டிப்பட்டி, பெரியசோரகை, பொன்னப்பன் காலனி, பெருமானுார் உள்பட பல்வேறு பகுதிகளில் வீடுதோறும் சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது மக்கள், அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து செல்வகணபதி பேசியதாவது:மத்திய அரசின், 10 ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு எந்த வளர்ச்சியும் இல்லை. டில்லியில் போராடும் விவசாயிகளை, மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. பெட்ரோல், டீசல், அரிசி, தங்கம் விலை உயர்வால் ஏழை மக்கள் பாதிப்பில் உள்ளனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை கட்டவில்லை.தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புக்கு நிதி கொடுக்கவில்லை. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், சில நாட்களுக்கு முன், 'பூஜ்யத்துக்கு கீழ் உள்ள கட்சி பா.ஜ.,' என கூறினார். ஆனால் தற்போது பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளார். சசிகலாவிடம் முதல்வர் பதவியை பெற்ற இ.பி.எஸ்., அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்தார். அதேபோல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் துரோகம் செய்தவர்தான் இந்த இ.பி.எஸ்.,தி.மு.க., ஆட்சியில் நகை கடன் தள்ளுபடி, மகளிருக்கு இலவச பஸ் வசதி, மகளிர் உரிமை தொகை உள்பட பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்து தமிழகத்தில் ஆட்சி நடத்துகிறார். அவருக்கு நீங்கள் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும். உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்தால், உங்கள் கோரிக்கைகளை உங்களுடன் இருந்து உடனுக்குடன் நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.நங்கவள்ளி ஒன்றிய செயலர் அர்த்தனாரீஸ்வரன், காங்., மாவட்ட பொருளாளர் ரத்தினவேல், இ. கம்யூ., ஒன்றிய செயலர் ஜீவானந்தம், வி.சி., சேலம் மேற்கு மாவட்ட செயலர் மெய்யழகன் உள்பட பலர் உடனிருந்தனர்.