/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எர்ணாகுளம் - டாடா நகர் ரயில் இயக்க நேரம் மாற்றம்
/
எர்ணாகுளம் - டாடா நகர் ரயில் இயக்க நேரம் மாற்றம்
ADDED : செப் 07, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் :எர்ணாகுளம் - டாடா நகர் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில், காலை, 7:15 மணிக்கு புறப்பட்டு, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே, 3ம் நாள் காலை, 6:37க்கு டாடா நகரை அடைகிறது. இந்த ரயில் இயக்க நேரம், நாளை முதல் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி போத்தனுாருக்கு காலை, 11:59க்கு பதில், 11:28க்கும், திருப்பூருக்கு, 12:53க்கு பதில், 12:13க்கும், ஈரோட்டுக்கு, 1:35க்கு பதில், 1:05க்கும், சேலம் ஜங்ஷனுக்கு, 2:42க்கு பதில், 2:13க்கும், ஜோலார்பேட்டைக்கு, 4:55க்கு பதில், 4:50க்கும் வந்து செல்லும்.
இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.