/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஈரோடு - செங்கோட்டை ரயில் கரூர் வரை மட்டும் இயக்கப்படும்
/
ஈரோடு - செங்கோட்டை ரயில் கரூர் வரை மட்டும் இயக்கப்படும்
ஈரோடு - செங்கோட்டை ரயில் கரூர் வரை மட்டும் இயக்கப்படும்
ஈரோடு - செங்கோட்டை ரயில் கரூர் வரை மட்டும் இயக்கப்படும்
ADDED : ஜன 22, 2025 07:21 AM

சேலம்: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: திண்டுக்கல் ரயில்வே யார்டில் மறு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், வரும், 24, 27 மதியம், 2:00 மணிக்கு புறப்படும், ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ், கரூர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், ஜன., 25, 28 அதிகாலை, 5:10க்கு கிளம்ப வேண்டிய செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், கரூரில் இருந்து கிளம்பும். இந்த ரயில்களில், கரூர் முதல் செங்கோட்டை வரையான சேவை ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல், வரும், 25, 28 காலை, 8:00 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ், கோவை - நாகர்கோவில் ரயில் ஆகியவை மாற்று தடமான, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும். இந்த ரயில்கள் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாதுரை, திண்டுக்கல், பாளையன் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு செல்லாது.
25ல் கோவை - ஹிசார் எக்ஸ்பிரஸ் பிகனேர் வரை மட்டும் சேவை
சேலம்: ராஜஸ்தான் மாநிலம் ரதன்கர் - மோலிசர் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே இரு வழிப்பாதை அமைக்கும் பணி நடப்பதால், வரும், 25 மதியம், 2:55க்கு கோவையில் கிளம்பும் கோவை - ஹிசார் எக்ஸ்பிரஸ், பிகனேர் ஸ்டேஷன் வரை மட்டும் இயக்கப்படும். பிகனேர் ஸ்டேஷன் முதல் ஹிசார் வரையான சேவை ரத்து செய்யப்படுகிறது என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
ஈரோடு -ஜோ.பேட்டை ரயில் திருப்பத்துார் வரை இயக்கம்
சேலம்: ஜோலார்பேட்டையில், 'சிக்னல்' மேம்படுத்தும் பணி நடக்க உள்ளது. இதனால் வரும், 28 காலை, 6:00 மணிக்கு புறப்படும், ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில், திருப்பத்துார் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், அன்று மதியம், 2:45க்கு கிளம்பும் ஜோலார்பேட்டை - ஈரோடு ரயில், திருப்பத்துாரில் இருந்து புறப்படும். இரு மார்க்கத்திலும் திருப்பத்துார் முதல் ஜோலார்பேட்டை வரையான சேவை ரத்து செய்யப்படுகிறது என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.