/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இறந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு இ.எஸ்.ஐ., சார்பில் ஓய்வூதியம்
/
இறந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு இ.எஸ்.ஐ., சார்பில் ஓய்வூதியம்
இறந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு இ.எஸ்.ஐ., சார்பில் ஓய்வூதியம்
இறந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு இ.எஸ்.ஐ., சார்பில் ஓய்வூதியம்
ADDED : ஜூன் 14, 2025 06:42 AM
சேலம்: இண்டஸ்ட்ரியல் டெக்னோ மேன்பவர் சப்ளை மற்றும் சர்வீசஸ் நிறுவனத்தில், ஜே.எஸ்.டபுள்யு., ஒப்பந்த பணியாளராக இருந்த ஆறுமுகம் மாரியப்பன், 2024 ஏப்., 23ல், பணி முடிந்து வீடு திரும்பும்போது சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதனால் அவரது குடும்பத்தினருக்கு, இ.எஸ்.ஐ., சேலம் துணை மண்டல இணை இயக்குனர் சிவராமகிருஷ்ணன், மாதந்தோறும் ஓய்வூதியம், 18,120 ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அதன்படி கடந்த, 11ல், ஜே.எஸ்.டபுள்யு., மனித வள மேம்பாட்டுத்துறை மேலாளர் இறைநம்பி, இண்டஸ்ட்ரியல் டெக்னோ மேன்பவர் சப்ளை நிறுவன இன்சார்ஜ் முருகன் முன்னிலையில், இ.எஸ்.ஐ., மேட்டூர் கிளை அலுவலக மேலாளர் அருண்பாலாஜி, ஆறுமு-கத்தின் குடும்பத்தினரிடம், ஓய்வூதியம் வழங்கினார்.
அதேபோல் தி பாரத் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்-றிய அறிவழகன் சின்னசாமி, 2023 ஐூன், 30ல் பணி முடிந்து வீடு திரும்பும்போது சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு, மாத ஓய்வூதியம், 16,110 ரூபாய் வழங்க உத்-தரவிடப்பட்டது. அதன்படி கடந்த, 27ல், இ.எஸ்.ஐ., சேலம் கிளை அலுவலக மேலாளர் ஜெனோவா, காசோலையை வழங்-கினார்.