/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கட்டுரை, பேச்சு போட்டி மாணவர்களுக்கு அழைப்பு
/
கட்டுரை, பேச்சு போட்டி மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஏப் 25, 2025 01:30 AM
சேலம்:
மறைந்த முன்னாள் முதல்வரான கருணாநிதி பிறந்த நாளான ஜூன், 3, செம்மொழி நாளாக கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் மே, 9ல், கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடக்க உள்ளது. மே, 10ல் கல்லுாரி மாணவர்களுக்கு போட்டி நடக்கும்.
கருணாநிதியின் தமிழ் தொண்டு தொடர்பான தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படும். பங்கேற்கும் மாணவர்களுக்கு தேநீர், உணவு, பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் வெற்றியாளர்கள், மே, 17ல் சென்னையில் நடக்கும் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர்.
மேலும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே 10,000, 7,000, 5,000 ரூபாய், மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு, 15,000, 10,000, 7,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.
மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு ஜூன், 3 சென்னையில் நடக்கும் செம்மொழி நாள் விழாவில் பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். விரும்பும் மாணவர்கள், http//tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு போட்டியிலும், போட்டி நடக்கும் நாளில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் நேரடியாக வரும் முதல், 150 பேர் அனுமதிக்கப்படுவர். விபரங்களுக்கு, 88388 05242, 96293 94642 என்ற எண்களில் அழைக்கலாம் என, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.