தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/மரத்தில் இருந்து விழுந்த 'எஸ்டேட்' காவலாளி பலி

மரத்தில் இருந்து விழுந்த 'எஸ்டேட்' காவலாளி பலி

மரத்தில் இருந்து விழுந்த 'எஸ்டேட்' காவலாளி பலி


ADDED : ஆக 05, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்காடு:ஏற்காடு, முண்டகம்பாடியை சேர்ந்தவர் முத்துசாமி, 63. அதே கிராமத்தில் உள்ள சேகர் என்பவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் காவலாளியாக பணிபுரிந்தார். அங்குள்ள பலா மரத்தில், நேற்று மாலை, 4:30 மணிக்கு பழம் பறிக்க ஏறினார்.

அதில் நிலை தடுமாறி விழுந்ததில், பலத்த காயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி, மருத்துவர் கூறினார். ஆனால் உறவினர்கள், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பார்த்துக்கொள்வதாக கூறி அழைத்துச்சென்றனர். ஆனால், மீண்டும் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பரிசோதனையில், அவர் இறந்தது தெரியவந்தது. ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us