தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஓய்வு பேராசிரியர் உண்ணாவிரதம்

ஓய்வு பேராசிரியர் உண்ணாவிரதம்

ஓய்வு பேராசிரியர் உண்ணாவிரதம்


ADDED : ஆக 05, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்:சேலம், பெரியார் பல்கலையில், பொருளியல் துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் வைத்தியநாதன். இவர் நேற்று, அப்பல்கலை வளாகத்தில் உள்ள ஈ.வெ.ரா., சிலை முன் அமர்ந்து அறவழி உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு இடைக்கால ஓய்வூதியம் அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. அதை நிறைவேற்றுவது, பல்கலையின் கடமை. ஆனால் விவாதமாக்குவது கண்டனத்துக்குரியது. இது ஓய்வூதியம் பெறுவதை தாமதமாக்கும் செயல். இதனால், 5 மாதங்களாக ஓய்வு பெற்றவர்கள் திண்டாடி வருகின்றனர். இதை அரசின் கவனத்துக்கு கொண்டு வர, ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us