தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வெள்ளி தொழிலாளி மர்மச்சாவு

வெள்ளி தொழிலாளி மர்மச்சாவு

வெள்ளி தொழிலாளி மர்மச்சாவு


ADDED : ஆக 05, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம், மணியனுார் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் சந்தோஷ், 21. வெள்ளி தொழிலாளியான இவர், கடந்த, 31 இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு வீடு திரும்பினார்.

தொடர்ந்து அவரது அறையில் துாங்கினார்.காலையில், வேலைக்கு வரவில்லை என தாய் சாந்தியிடம் கூறினார். இதனால் அவர் மட்டும் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பினார். அப்போது சந்தோஷ், வாயில் நுரை தள்ளியபடி, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த, அன்னதானப்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீசார் கூறுகையில், 'போதையா, போதை ஊசி பயன்பாடு இருந்ததா என விசாரணை நடக்கிறது. அதேநேரம் பிரேத பரிசோதனைக்கு பின் தான் உரிய காரணம் தெரியவரும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us