/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'லோக்சபா தேர்தல் தேதி அறிவித்தாலும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும்'
/
'லோக்சபா தேர்தல் தேதி அறிவித்தாலும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும்'
'லோக்சபா தேர்தல் தேதி அறிவித்தாலும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும்'
'லோக்சபா தேர்தல் தேதி அறிவித்தாலும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும்'
ADDED : மார் 05, 2024 02:07 AM
சேலம்;''லோக்சபா தேர்தல் தேதி அறிவித்தாலும், வேலை நிறுத்த போராட்டம் தொடரும்,'' என, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்
தலைவர் அர்த்தனாரி தெரிவித்தார்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாநில துணைத் தலைவர் அர்த்தனாரி தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின், அர்த்தனாரி நிருபர்களிடம் கூறியதாவது:அனைத்து நிலை அலுவலர்களுக்கும், மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும், என, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்.,13ல் போராட்டம் துவக்கப்பட்டது.
தமிழக முதல்வர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எங்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளோம். போராட்டத்தால் வருவாய்த்துறையின் அனைத்து பணிகளும் பாதித்துள்ளது. லோக்சபா தேர்தல் தேதி அறிவித்தாலும் போராட்டம் தொடரும்.
இவ்வாறு கூறினார்.

