/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'
/
'தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'
'தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'
'தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'
ADDED : செப் 07, 2025 01:29 AM
சேலம் :சேலம், 5 ரோடு அருகே, மாநகராட்சி இடத்தில், நகர்புற பசுமையாக்குதல் திட்டத்தில், மரக்கன்றுகள் நடும் பணியை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று தொடங்கி வைத்தார்.தொடர்ந்து அவர் கூறியதாவது:தமிழக வனப்பரப்பை, 33 சதவீதமாக அதிகரிக்க தமிழக பசுமை இயக்கம் திட்டம் மூலம், பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
அதன்படி சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பொது வகை பயன்பாட்டில் உள்ள, 18,250 சதுரடி நிலப்பரப்பில் வேம்பு, பூவன், புங்கை, நாவல், மூங்கில், தேக்கு என, 150க்கும் மேற்பட்ட வகைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மக்களும், குடியிருப்புகளை சுற்றியுள்ள காலி இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், எம்.பி., செல்வகணபதி, மேயர் ராமச்சந்திரன், துணை மேயர்
சாரதாதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.