/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'துாய்மை மாநகராட்சியாக திகழ அனைவரது ஒத்துழைப்பு அவசியம்'
/
'துாய்மை மாநகராட்சியாக திகழ அனைவரது ஒத்துழைப்பு அவசியம்'
'துாய்மை மாநகராட்சியாக திகழ அனைவரது ஒத்துழைப்பு அவசியம்'
'துாய்மை மாநகராட்சியாக திகழ அனைவரது ஒத்துழைப்பு அவசியம்'
ADDED : அக் 03, 2024 06:42 AM
சேலம் : சேலம், கோட்டை பல்நோக்கு அரங்கில், 'துாய்மை இந்தியா' திட்டத்தின், 'துாய்மையே சேவை' நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதற்கு மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்து, 'துாய்மையே சேவை - 2024' நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னார்வலர், தொண்டு நிறுவனத்தினர், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் உள்பட, 21 பேரை பாராட்டி சான்றிதழ், கேடயம் வழங்கினார். அதேபோல் இச்சேவையில் பணியாற்றிய துாய்மை பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், பரப்புரையாளர்கள் என, 300 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தொடர்ந்து அவர், 'துாய்மையான மாநகராட்சியாக திகழ அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்' என கேட்டுக்கொண்டார். துணை மேயர் சாரதாதேவி, துணை கமிஷனர் பாலசுப்ரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆத்துார் நீதிமன்றம்ஆத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துாய்மை மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முனுசாமி தலைமை வகித்தார். அதில் நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள், வக்கீல்கள், நீதிமன்ற வளாக உட்புறம், வெளிப்புறத்தை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வக்கீல் சங்க தலைவர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் காந்தி நகர் பூங்காவில் துாய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சியை, நகராட்சி தலைவர் நிர்மலாபபிதா தொடங்கி வைத்தார். துாய்மை பணியாளர்கள், சுய உதவி குழுவினர், துாய்மை பணியில் ஈடுபட்டனர்.