ADDED : நவ 16, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செயற்பொறியாளர்
பொறுப்பேற்பு
மேட்டூர், நவ. 16-
மேட்டூர் அணை செயற்பொறியாளராக இருந்த சிவகுமார், பதவி உயர்வு பெற்று கண்காணிப்பு பொறியாளராக நியமிக்கப்பட்டார். இதனால் செயற்பொறியாளர் பணியிடம் காலியாக இருந்ததால், அதையும் அவரே கூடுதல் பொறுப்பாக கவனித்தார். இந்நிலையில் சரபங்கா சேலம் கோட்ட உதவி செயற்பொறியாளர் வெங்கடாசலம் பதவி உயர்வு பெற்று மேட்டூர் அணை செயற்பொறியாளராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று, செயற்பொறியாளராக
பொறுப்பேற்றார்.