/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபைல், பேட்டரி பறிமுதல் 4 கைதிக்கு சலுகை ரத்து
/
மொபைல், பேட்டரி பறிமுதல் 4 கைதிக்கு சலுகை ரத்து
ADDED : ஜன 26, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மத்திய சிறை, 14வது பிளாக் கைதிகள் அறையில் உதவி சிறை அலுவலர் செல்வேந்திரன் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
அங்கிருந்த கழிப்பறைக்குள் சிறு மூட்டை கிடந்தது. அதை பிரித்து பார்த்தபோது மொபைல் போன், பேட்டரி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறி-முதல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த அறை கைதிகளான, முபாரக், 26, மணிகண்டன், 28, சுரேஷ், 40, முருகன், 35, ஆகி-யோரிடம், எஸ்.பி., வினோத் விசாரித்தார். அவர்கள் முன்னுக்-குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால், 4 பேருக்கும், சிறை சலுகைகளை, 2 மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.

