/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உழவர் திரள் பெருவிழாவில் கண்காட்சி
/
உழவர் திரள் பெருவிழாவில் கண்காட்சி
ADDED : அக் 05, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காடையாம்பட்டி : காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை விதைப்பண்ணையில், 'உழவர் திரள் பெருவிழா' நேற்று நடந்தது. காடையாம்பட்டி வேளாண் உதவி இயக்குனர் செல்வம் தலைமை வகித்தார். அதில் வேளாண் துறை சார்ந்த திட்டங்கள், மானியங்கள், கரும்பு உற்பத்தி, கால்நடை தொடர்பான விபரங்கள், வேளாண் வணிகம், விற்பனை, பட்டு வளர்ச்சித்துறை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும் அங்கு வைக்கப்பட்ட கண்காட்சியில் வேளாண் கருவிகள், பயிர், விதை நெல் ரகங்கள், இயற்கை உரங்கள் ஆகியவற்றை ஏராளமான விவசாயிகள் பார்வையிட்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகப்பிரியா, வேளாண் அதிகாரிகள் பங்கேற்றனர்.