/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேட்டாம்பாடி ஏரியை துார்வார எதிர்பார்ப்பு
/
வேட்டாம்பாடி ஏரியை துார்வார எதிர்பார்ப்பு
ADDED : ஆக 22, 2025 01:23 AM
சேந்தமங்கலம், -சேந்தமங்கலம் அடுத்துள்ள வேட்டாம்பாடி ஏரியை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேந்தமங்கலம்-நாமக்கல் பிரதான சாலையில், வேட்டாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெரிய ஏரிஉள்ளது. மழை காலங்களில் ஏரி முழுவதும் நிரம்பி, கடல் போல் காட்சி அளிக்கும். கோடை காலத்தில் கூட, ஏரி வறண்டு போகாமல் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும்.
தற்போது ஏரியில் ஆகாயத்தாமரை படர்ந்து புதர் போல காணப்படுகிறது. அந்த இடங்களில் நிறைய விஷ ஜந்துக்கள், சாலையை கடக்கும் சூழல் அதிகமாக இருப்பதால், டூவீலரில் செல்பவர்கள் தடுமாறுகின்றனர். இதை தவிர்க்கும் பொருட்டு, ஏரியை துார்வார நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.