/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வரும் 26ல் காலாவதியான போலீஸ் வாகனங்கள் ஏலம்
/
வரும் 26ல் காலாவதியான போலீஸ் வாகனங்கள் ஏலம்
ADDED : டிச 24, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், டிச. 24-
சேலம் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
சேலம் மாவட்ட போலீசாரால் பயன்படுத்தப்பட்டு காலாவதியான, 9 நான்கு சக்கர வாகனங்கள், 7 இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களுக்கான ஏலம் வரும், 26ல் குமாரசாமி
பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதை நேற்று மக்கள், வியாபாரிகள் பார்வையிட்டனர்.ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நான்கு சக்கர வாகனங்களுக்கு, 5,000 ரூபாய், இரண்டு சக்கர வாகனங்களுக்கு, 1,000 ரூபாய் முன்பணமாக செலுத்தினர். மேலும் விவரங்களுக்கு 94981 67289 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.