மின் பற்றாக்குறை இல்லை என விளக்கம் குடிநீர் வினியோகத்தில் தொடரும் சிக்கல்
மின் பற்றாக்குறை இல்லை என விளக்கம் குடிநீர் வினியோகத்தில் தொடரும் சிக்கல்
ADDED : ஜூலை 09, 2026 01:49 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அடுத்த தும்பல்பட்டி ஊராட்சி, கூட்டாறு பகு-தியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் நீர் உந்து நிலையம் உள்ளது. அங்கிருந்து தினமும் தும்பல்பட்டி ஊராட்சிக்கு, 1,48,000 லிட்டர், கம்மாளப்பட்டி ஊராட்சிக்கு, 1,75,000 லிட்டர் காவிரி குடிநீர் வழங்க வேண்டும்.
நீர் உந்து நிலையத்தில் ஒவ்வொரு கிராமத்துக்கும் குடிநீர், 'பம்பிங்' செய்ய, 8 மின் மோட்டார்கள் தனித்தனியே உள்ளன. அனைத்து மோட்டார்களையும் இயக்கினால், மின் பற்றாக்குறை ஏற்படுகிறது. குறைந்த மின் அழுத்தத்ததால், மோட்டார்கள் சரியாக இயங்குவதில்லை. இதனால் தும்பல்பட்டி, கம்மாளப்பட்டி ஊராட்சிகளில் உள்ள, 12க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'புகார் வந்-ததால், நீர் உந்து நிலையம் அருகே உள்ள மின்மாற்றியில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் தேவையான அளவு மின்அழுத்தம் உள்-ளது. அதனால் குடிநீர் வடிகால் வாரியம், குடிநீர் எடுக்க, அனு-மதி பெறப்பட்ட மின் திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்தப்-படுகிறதா அல்லது கூடுதல் மின் திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்தப்படு
கிறதா என ஆய்வு செய்தால்தான் பிரச்னை தெரியவரும். இது
குறித்து உடனே ஆய்வு செய்யப்படும்' என்றனர்.
