ADDED : ஜூலை 09, 2026 01:49 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், வ.உ.சி., பூ மார்க்கெட்டில் கடந்த, 1ல் சன்ன மல்லி பூ கிலோ, 280 ரூபாய்க்கு விற்றது. நேற்று, 160 ரூபாய் சரிந்து ஒரு கிலோ பூ, 120 ரூபாய்க்கு விற்பனையானது.
அதேபோல் குண்டு மல்லி பூ, கடந்த வாரம் கிலோ, 500க்கு விற்ற நிலையில், நேற்று, 320 ரூபாய்க்கு விற்பனையானது. அரளி பூக்களும் சரிந்து, ரகங்களுக்கேற்ப கிலோ, 50 முதல், 60 ரூபாய்க்கு விற்பனையானது. சாமந்தி பூ மாற்றமின்றி கிலோ, 240க்கு விற்பனையானது.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'திருமண சீசன், கோவில் திருவிழா என, பூக்கள் தேவை அதிகம் இல்லாததால், விலை குறைந்துள்ளது' என்றனர்.
