/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
/
மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
ADDED : ஜூலை 10, 2025 01:37 AM
வீரபாண்டி,  வீரபாண்டி வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம், தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம், உத்தமசோழபுரத்தில் உள்ள,  மாநில வேளாண் விற்பனை வாரிய பயிற்சி மையத்தில் நேற்று நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகாயினி   தலைமை  வகித்து, நடப்பாண்டில்  வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசு மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். வட்டார அட்மா குழு தலைவர் வெண்ணிலா, அரசு செயல்படுத்தும் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டார்.
மேலும் விவசாயிகள் பயிற்சி, கண்டுணர்வு பயணம், உழவர் திரள் பரவலாக்கம், பண்ணைப்பள்ளி, வேளாண் விஞ்ஞானி மற்றும் விரிவாக்க அலுவலர் கூட்டு வயலாய்வு ஆகியவைக்கு ஒதுக்கப்பட்ட முதல் கட்ட நிதி செலவினம் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது.

