ADDED : செப் 13, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் வக்கீல்கள் சங்கம், தனியார் கண் மருத்துவமனை சார்பில் வக்கீல்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தொடங்கி வைத்தார்.
ஏராளமான வக்கீல்கள், கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், நீரிழிவு, இ.சி.ஜி., பரிசோதனைகள் எடுத்துக்கொண்டனர். தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பமணி, வக்கீல் சங்கத்தலைவர் விவேகானந்தன், செயலர் நரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.