/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரிசி ஏற்றுமதி சுங்க வரி முழு விலக்கு ஆலை உரிமையாளர்கள் வரவேற்பு
/
அரிசி ஏற்றுமதி சுங்க வரி முழு விலக்கு ஆலை உரிமையாளர்கள் வரவேற்பு
அரிசி ஏற்றுமதி சுங்க வரி முழு விலக்கு ஆலை உரிமையாளர்கள் வரவேற்பு
அரிசி ஏற்றுமதி சுங்க வரி முழு விலக்கு ஆலை உரிமையாளர்கள் வரவேற்பு
ADDED : அக் 27, 2024 04:15 AM
ஆத்துார்: அரிசி ஏற்றுமதி சுங்க வரிக்கு முழு விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டதால் அரிசி ஆலை உரிமையாளர்கள் வரவேற்-றுள்ளனர்.
இந்திய அரிசி வகைகளுக்கு உலகளாவிய தேவை அதிகரித்து வருவது, நாட்டின் ஏற்றுமதி வருவாயில் குறிப்பிடத்தக்க பங்க-ளிப்பை அளித்தது. 2023ல் மழை குறைவாக இருந்ததால், நெல் சாகுபடி குறைந்தது. இதனால் அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்த, 20 சதவீத சுங்க வரியை, மத்திய அரசு விதித்தது. கடந்த செப்., 28ல் புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி சுங்க வரியை, 20ல் இருந்து, 10 சதவீதமாக குறைத்தது. இரு நாட்களுக்கு முன், 10 சதவீத வரியையும் நீக்கியது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் துளசிமணி கூறுகையில், ''தற்போது அரிசி ஏற்றுமதிக்கு வரியில்லாமல் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆலை உரி-மையாளர்கள் சார்பில் வரவேற்கிறோம். இந்த வரி விலக்கு மூலம் இருப்பு உள்ள அரிசி, அதிகளவில் ஏற்றுமதி வர்த்தகம் இருக்கும். உணவு பொருள் மீதான, ஜி.எஸ்.டி.,யை தவிர்க்க வேண்டும். அரிசி, 'பேக்கிங்', தவிடுக்கு விதித்துள்ள, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி விலக்கு அளிக்க வேண்டும்.
அப்படி செய்தால் அரிசி விலை சீராகும். உற்பத்தியும் அதிக-ரிக்கும்,'' என்றார்.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க செயலர் பரணிதரன் கூறுகையில், ''தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட அரிசி உற்-பத்தி ஆலைகள் உள்ளன. சுங்க வரி, மின் கட்டண உயர்வு உள்-ளிட்ட காரணங்களால், 50 சதவீத ஆலைகள் இயக்க முடியாத நிலை இருந்தது. ஏற்றுமதி சுங்க வரியை, 20ல் இருந்து தற்போது முழுமையாக நீக்கப்பட்டதால் மத்திய அரசுக்கு நன்றி. இதன்-மூலம் அரிசி பொருளாதார வர்த்தகம் அதிகரிக்கும். ஏற்றுமதியும் அதிகரிக்கும். அதேநேரம், அரிசி 'பேக்கிங்' ஜி.எஸ்.டி.,க்கு வரி-விலக்கு, மின் கட்டணம் குறைப்பு குறித்து மத்திய, மாநில அர-சுகள் பரிசீலிக்க வேண்டும்,'' என்றார்.