ADDED : ஜூலை 16, 2026 01:28 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், அஸ்தம்பட்டி அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு, தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
அங்குள்ள ஒரு மரம், நேற்று மதியம், 12:00 மணிக்கு வேரோடு சாய்ந்து, அருகே இருந்த இரு கார்கள் மீது விழுந்தது. இரு கார்களும் சேதம் அடைந்தன. ஒரு கார் அரசு வக்கீல் மணிகண்டனுக்கு சொந்தமானது, மற்றொரு கார், ஓம-லுாரில் ஹோட்டல் நடத்தும் சஞ்சயின் கார் என தெரிந்தது. ஆட்கள் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. பின் சாய்ந்த மரத்தை அகற்றும் பணி நடந்தது.
