ADDED : ஜூலை 16, 2026 01:27 AM
அ நிறம் | அளவு
சேலம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், அம்மாபேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார், 48. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கெல-மங்கலத்தில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணை கைதியாக, கடந்த ஜூன், 26ல் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
நேற்று அவருக்கு வலிப்பு வந்த நிலையில், சிறை மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவம-னைக்கு அனுப்பினர். ஆனால் வழியில் உயிரிழந்தார். சிறை அதி-காரிகள் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். முதல்கட்ட விசாரணையில், சதீஷ்குமாருக்கு இருதய பிரச்னை இருந்த நிலையில் வலிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
