/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாரட் வண்டியில் அழைத்துச்சென்று தலைமை ஆசிரியருக்கு பிரியாவிடை
/
சாரட் வண்டியில் அழைத்துச்சென்று தலைமை ஆசிரியருக்கு பிரியாவிடை
சாரட் வண்டியில் அழைத்துச்சென்று தலைமை ஆசிரியருக்கு பிரியாவிடை
சாரட் வண்டியில் அழைத்துச்சென்று தலைமை ஆசிரியருக்கு பிரியாவிடை
ADDED : ஏப் 30, 2025 01:18 AM
இடைப்பாடி:
தேவூர் அருகே பொன்னம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தனராஜ். ஆசிரியர் பணியில் சேர்ந்து, 40 ஆண்டு, 3 மாதம் பணிபுரிந்த இவர், பொன்னம்பாளையம் பள்ளியில், 5 ஆண்டாக பணியாற்றினார். தேசிய நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார். இவர் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதனால் அப்பகுதி மக்கள், கல்வித்துறை அலுவலர்கள், மாணவர்கள் திரளானோர், தனராஜூக்கு பாராட்டு விழா நடத்தினர். குறிப்பாக சீர் வரிசை செய்து, தனராஜூக்கு மாலை அணிவித்து, குதிரைகள் பூட்டிய சாரட் ரதத்தில் அமர வைத்து மேள தாளம் முழங்க பள்ளியில் இருந்து செட்டிப்பட்டி வரை, அவரது வீட்டுக்கு அழைத்து சென்று வழி அனுப்பி பிரியாவிடை
கொடுத்தனர்.