ADDED : ஏப் 22, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:மேட்டூர், பெரியார் நகரை சேர்ந்தவர் மயில்சாமி, 48. இவர் மேட்டூர் நகராட்சி சர்க்கார் தோட்டத்தில், பண்ணை காவலராக கடந்த, 15 ஆண்டுகளாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு வீட்டில் இருந்த மயில்சாமி, திடீரென நெஞ்சை பிடித்தவாறு கீழே விழுந்தார்.
மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு, அவரை கொண்டு சென்ற போது, ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.