/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இலவச மின் இணைப்பு வழங்கியதாக மோசடி குறைதீர் கூட்டத்தில் விவசாயி குற்றச்சாட்டு
/
இலவச மின் இணைப்பு வழங்கியதாக மோசடி குறைதீர் கூட்டத்தில் விவசாயி குற்றச்சாட்டு
இலவச மின் இணைப்பு வழங்கியதாக மோசடி குறைதீர் கூட்டத்தில் விவசாயி குற்றச்சாட்டு
இலவச மின் இணைப்பு வழங்கியதாக மோசடி குறைதீர் கூட்டத்தில் விவசாயி குற்றச்சாட்டு
ADDED : டிச 28, 2024 02:23 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் விவசாயிகள் பேசியதாவது:
வெங்கடாசலம்: ஏ.டி.ட்டி - 55 ரக விதை நெல், அயோத்தியாப்-பட்டணம், வாழப்பாடி, ஆத்துார், கெங்கவல்லி உள்பட, 10க்கும் மேற்பட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு இல்லை. அதனால் சேலம், சீலநாயக்கன்பட்டி விரிவாக்க மையத்துக்கு சென்று வாங்கும் நிலை உள்ளது. தட்டுப்பாட்டை போக்க, எல்லா மையத்திலும் போதிய அளவில் இருப்பு வைத்து விற்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரேஷ்: 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தில் நங்கவள்ளி - வாத்-திப்பட்டி ஏரிக்கு, குழாய் பதிப்பு, கால்வாய் பணி முடிந்தும் தண்ணீர் திறந்து விடாமல் அதிகாரிகள் போக்குகாட்டுகின்றனர். மேலும் வைரன், குப்பம்பட்டி, ராமரெட்டிப்பட்டி, ஆரூர்பட்டி ஏரிகளுக்கு, மேட்டூர் உபரிநீர் கொண்டு வர, கால்வாய் பணி தொடங்கவில்லை. நிதி இல்லை என, பொதுப்பணித்துறையினர் தட்டிக்கழித்து வருகின்றனர். அரசு உடனே நிதி ஒதுக்க வேண்டும்.
செந்தில்: மேச்சேரி அருகே பஞ்சுகாளிப்பட்டியில், 10 ஆண்டுக-ளுக்கு முன் இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பித்து, ஓராண்-டுக்கு முன் அனுமதி கிடைத்தும் பிரயோஜனமில்லை. கம்பம், மின்மாற்றி, ஒயர் உள்ளிட்ட உதிரி பாகனங்கள் எதுவும் இல்லை என கூறி, மின்வாரிய அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். அதேபோல் மேட்டூர் மின்வட்டத்தில் மட்டும், 500க்கும் மேற்-பட்ட விவசாயிகள், இலவச மின்இணைப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
நல்லதம்பி: சிங்கிபுரம் அடுத்த மேட்டூடையார்பாளையம் நிலத்-துக்கு, 2010ல் இலவச மின் இணைப்பு வழங்கிவிட்டு, கொட்ட-வாடியில் உள்ள நிலத்துக்கும் இலவச இணைப்பு வழங்கிய-தாக கையெழுத்து பெற்று மோசடி நடந்துள்ளது. கேட்டால் கொட்டவாடி விண்ணப்பம், 2015ல் காலாவதி ஆகிவிட்டது என்-றவர்கள், 2016ல் அனுமதி அளித்தும், நீங்கள் இலவச இணைப்பு பெற முன்வரவில்லை என கடிதம் அனுப்பினர். இதுதொடர்பாக பல ஆண்டாக தொடர்ந்து புகார் மனு அளித்தும், மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
நிதி முறைகேடு
ஆறுமுகம்: தர்மபுரி தொப்பையாற்றின் நீர் வாய்க்கால்கள், சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்-ளாறு, தெத்திகிரிப்பட்டி, மல்லிகுந்தம் என, 25 கி.மீ.,க்கு நீள்கி-றது. இந்த நீர் வாய்கால் பராமரிப்பின்மை, துார்வாராததால் அடைபட்டு, தண்ணீர் வரத்தின்றி, 3 ஊராட்சி மக்கள் பாதிக்கப்-பட்டுள்ளனர். துார்வார ஒதுக்கிய நிதி முறைகேடு செய்யப்பட்-டுள்ளதால் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

