/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் படுகாயம் அடைந்த விவசாயி பலி
/
விபத்தில் படுகாயம் அடைந்த விவசாயி பலி
ADDED : டிச 01, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்தில் படுகாயம்
அடைந்த விவசாயி பலி
ஆத்துார், டிச. 1-
கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி, தகரபுதுாரை சேர்ந்த விவசாயி பிரபு, 38. கடந்த, 25ல், தகரபுதுாரில் இருந்து கொண்டையம்பள்ளிக்கு, 'டிஸ்கவர்' பைக்கில், சென்றுகொண்டிருந்தார். அப்போது தகரபுதுார் நோக்கி மணிவேல், 58, என்பவர் ஓட்டி வந்த சைக்கிள் மீது, பிரபு ஓட்டிச்சென்ற பைக் மோதியது. இதில் தடுமாறி விழுந்த பிரபு படுகாயமடைந்து, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

