/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
/
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
ADDED : ஜூலை 10, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே ஏ.என்.மங்கலத்தை சேர்ந்த விவசாயி வெங்கடாஜலம், 65. நேற்று மாலை ஆட்டுக்கு புல் அறுக்க, அருகே உள்ள தோட்டத்துக்கு சென்றார். மாலை, 6:00 மணிக்கு, தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, அவர் மூழ்கிவிட்டார். உடனே காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள், சேலம் தீயணைப்பு துறையினரை வரவழைத்து, கிணற்றில் மூழ்கி பலியான வெங்கடாஜலம் உடலை மீட்டனர். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.