ADDED : ஜூலை 23, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், சன்னியாசிகுண்டை சேர்ந்த, விவசாயி ராஜசேகரன், 35. இவருக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ராஜசேகரன், நேற்று முன்தினம் வீடு அருகே உள்ள தோட்டத்துக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதை பார்த்து, அவரது மனைவி புவனேஸ்வரி கூச்சலிட, அருகே உள்ளவர்கள் வந்து, காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதையடுத்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து, ராஜசேகரனை சடலமாகவே மீட்டனர். கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.